தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களிலேயே முதல்வர் பல நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உடனுக்குடன் ரேஷன் அட்டைகளை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் பலரும் ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பதால் ரேஷன் அட்டைகளை விநியோகிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடத்தப்படும் என்று கடந்த 26-ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பால் தேர்தல் நடத்தை பணிகள் அமலில் இருந்ததால் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியுடைய 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அரிசி அட்டைகளை வழங்குவதற்கு அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்தனர். இருப்பினும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய பொருள்கள் இந்த மாதம் 25-ஆம் தேதி முதல் கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே தற்போது ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளை புதிய ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் புதிய ரேஷன் அட்டைகள் விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.