உங்கள் மகளையோ, சகோதரியையோ குடிப்பழக்கம் இருக்கும் உயரதிகாரிக்கு மணம் முடிப்பதை விட, குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளிக்கோ, ரிக்ஷா ஓட்டுபவருக்கோ திருமணம் செய்து கொடுங்கள் என்று மத்திய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியிருக்கிறார் இதுகுறித்து ட்வீட் செய்த ராமதாஸ். கௌஷல் கிஷோரின் வார்த்தைகள் உண்மையானவை. வலிகள் நிறைந்தவை.
இந்தியாவிலேயே இளம் கைம்பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான். சாலை விபத்துகள், தற்கொலைகள், மன நல பாதிப்புகள் ஆகியவற்றிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்கும் மதுவே காரணம். குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதனை இன்றே கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.