நிவர் புயல் பற்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார்.
தமிழகத்தில் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். அதுமட்டுமன்றி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இது பற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரிடம் கேட்டறிந்தேன். மேலும் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.