Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு – காங்கிரஸ் உறுதி…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். மேலும் மக்களை கவரும் வண்ணம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் 3 வேளாண் சட்டங்களுக்கு பதிலாக விவசாயிகளை காக்கும் சட்டங்கள் கொண்டுவரப்படும். சாதிமறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு அனைத்து பணிகளிலும் சலுகை வழங்கப்படும், தமீழகத்தில் பூரண மதுவிலக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |