பூரண மதுவிலக்கு திட்டம் அமல்படுத்துவதாக எந்த ஒரு வாக்குறுதியையும் அளிக்கவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தமிழகத்தில் உள்ள மின் வாரியத்தை மேம்படுத்துவதற்காகவே மக்கள் ஏற்றுக்கொள்ள தக்க கட்டணத்தைத்தான் உயர்த்தியுள்ளோம். அதன் பிறகு பாஜக ஆளும் உத்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின்கட்டணம் குறைவுதான் என்றும், அதிமுக கட்சியின் போது 39 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நாங்கள் மின் கட்டணத்தை மாற்றி அமைத்ததால்தான் தமிழக அரசின் மானியம் 12,700 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து மின்வாரியத் துறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் 2200 கோடி ரூபாயை சேமித்துள்ளோம்.
கடந்த ஆட்சியின் போது தனியார் நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்வது அல்லது குறைந்த விலையில் மின்சாரங்களை வாங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் புதிய மின் உற்பத்தி திட்டங்களின் மூலமாக 6620 மெகாவாட் மின்சாரம் வரை தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி மற்றும் மரபுசாரா மின் உற்பத்தி போன்றவைகள் நமக்கு எல்லா காலங்களிலும் கிடைக்காது. தமிழக மக்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் நவீன மீட்டர் பெட்டிக்கு கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும், மீட்டர் பெட்டிக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் கூறினார்.
திமுக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு 45 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கு திட்டம் அமல்படுத்தப்படும் என்பது குறித்து எந்த ஒரு வாக்குறுதியும் கொடுக்கப்படவில்லை என்றார். இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக மதுபானம் விற்கப்படுகிறது என உங்கள் பத்திரிக்கையில் ஆதாரபூர்வமாக செய்தி வெளி வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடந்த 6 மாதங்களில் டாஸ்மாக் கடைகளின் மூலம் வரும் வருமானத்தில் 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் மதுபான கடைகள் மூலம் 330 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைக்கிறது என்று அமைச்சர் கூறினார்.