Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு?… வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வரி குறைப்பு பற்றி இன்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடைத்துள்ளது. மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் பெட்ரோல் மற்றும் டீசல் வரியை ராஜஸ்தான், அசாம், மேகாலயா மற்றும் நாகலாந்து மாநில அரசுகள் குறைத்துள்ளன. அதனால் அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இந்த நிதியாண்டு காண இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக மாணவர்கள், பெண்கள் அனைவருக்கும் பல்வேறு நலத் திட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இன்றைய பட்ஜெட்டில் பெட்ரோல் வரி குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |