மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் விற்பனையாகி வந்த நிலையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ97.19 க்கும், டீசல் 27 காசுகள் அதிகரித்து ரூ.91.42 க்கும் விற்பனையானது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.97.43 க்கும், டீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.91.64 க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் முதல் முறையாக பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது.
மேலும் டீசல் விலை ரூ.93.92க்கும், ஸ்பீடு பெட்ரோல் ரூ.102.3 விற்பனை செய்யப்படுவது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், எரிபொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.