தமிழகத்தில் முதியோர், பணி ஓய்வு பெற்றவர்கள், ஆதரவற்ற கைவிடப்பட்ட விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் பென்சன் திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டங்களை பெறுபவர்கள் கட்டாயமான முறையில் ஆதார் கார்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பென்ஷன் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகையாக வழங்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஆதார் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆதார் கார்டு பெறும் வரை பென்சன் தொகை பெறுவதற்கு ஆதார் கார்டு விண்ணப்பித்ததற்கான கோரிக்கை ஆவணம் காட்ட வேண்டும். இதோடு வாழ்வு சான்றிதழ் மற்றும் ஜீவன் பிரமாண பத்திரம் ஆகியவற்றையும் தற்போது சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனை சமர்ப்பிப்பதற்கு நாளை கடைசி நாளாக அறிவித்துள்ளது.
பணி ஓய்வு பெற்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தங்களது வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இவ்வாறு சமர்ப்பித்தால் மட்டுமே ஒரு ஓய்வூதியதாரர் உயிரோடு இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த முடியும் எனவும் அறிவித்துள்ளது. இதனை வங்கிகளில் நேரில் சென்று அல்லது தபால்காரர் மூலமாக சமர்ப்பிக்கலாம். அது மட்டுமல்லாமல் பல்வேறு வங்கிகள் வீட்டிற்கே வந்து வாழ்வு சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் சேவைகளை வழங்குகிறது. மேலும் https://jeevanpramaan.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் தங்களது வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.