தமிழகத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்ற போது மின்சாரம் தாக்கி சிறுவன் என்பவர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களை நிறுத்த கூறி பலமுறை கண்ட பிறகும் இது போன்ற விரும்பத்தகாத மற்றும் கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது வருத்தமடைய செய்கிறது. அதுமட்டுமல்லாமல் உயிரிழந்த தினேஷ் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன். இனி இது போன்றவை நடக்காமல் தடுப்பது உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்” என்று முதல்வர் கூறியுள்ளார்.