தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக அவ்வபோது புதுவிதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் நோக்கத்தில் பேருந்துகளில் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விடலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி பொதுமக்கள்,விவசாயிகள் மற்றும் வணிகர்கள் தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக பேருந்தில் உள்ளசுமை பெட்டியை வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. பேருந்தின் சுமை பெட்டிகள் மூலமாக பொருட்களைக் கொண்டு செல்ல விரும்பினால் அருகில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் சென்று விண்ணப்பிக்கும் படி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
அதன்படி தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் நாளை முதல் பார்சல் சேவை தொடங்குகிறது. முதற்கட்டமாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை,கோவை மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்குகிறது. இதில் 80 கிலோ எடைவரைப் பொருட்கள் அனுப்ப 390 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பார்சல் அனுப்ப விரும்புபவர்கள் அருகில் உள்ள கிளை மேலாளரை அணுகலாம்.