தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு சென்னை பாரிமுனையில் இருந்து விரைவுப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை பாரிமுனையில் இருந்து தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி தியாகராய நகரில் இருந்து தூத்துக்குடி, தஞ்சை, கும்பகோணம், பிராட்வேயில் இருந்து மதுரை மற்றும் நெல்லைக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான பயணச் சீட்டுகளை www.tnstc.in என்ற இணையதளத்திலோ அல்லது tnstc official app மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.