Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்துகளில்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்துகள் பல மாதங்களாக இயக்கப்படாமல் இருந்தது. கடந்த ஓராண்டாக சரிவர பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது கொரோனா குறைந்து வருவதால் தமிழகத்திற்குள் மாவட்ட வாரியாக பேருந்துகள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 50 சதவித இருக்கைகளுடன், முககவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றி பேருந்துகள் இயக்க தமிழக அரசு கூறியுள்ளது. அத்துடன் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் பேருந்து கட்டணம் உயரமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

அதேசமயம் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதால் பேருந்து கட்டணம் உயருமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து இருந்தது

இந்நிலையில் டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்த படாது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தற்போது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் 19 ஆயிரத்து 201 அரசு பேருந்துகளில் 15 ஆயிரத்து 627 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இலவச பயணம் அறிவிக்கப்பட்ட பின் 60 % மகளிர் அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |