Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறதா….? உண்மை நிலவரம் என்ன…. வெளியான தகவல்…..!!!!!!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 20 மண்டலங்களும், 330 பேருந்து பணிமனைகளும் இருக்கின்றன. மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் இயங்கி வருகிறது. இதன் மூலம் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் நாளொன்றுக்கு இரண்டு கோடி பயணிகள் பயணிக்கின்றனர். இந்த பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகள் 10 முதல் 15 ஆண்டுகளும் மேலான பழைய பேருந்துகள். பழைய பேருந்துகள் தான் அதிகளவில் இயக்கப்பட்டுவருகிறது . 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டும் இதுவரை வாங்கப்படவில்லை.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்த கூடாது என்பதில்  முதல் அமைச்சர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். எனவே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |