தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் கேட்பதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பதிவு செய்து வருகின்றன.
இதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகளவு கட்டணம் வசூல் செய்து வருகின்றது. அதாவது சாதாரண கட்டணத்தை காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக பலமுறை அரசு எச்சரிக்கை விடுத்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதனை காதல் வாங்குவது இல்லை. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல வழக்கமாக ரூபாய் 700 முதல் 1000 வசூல் செய்யப்படும் நிலையில் தற்போது டிக்கெட் விலை 3000 ரூபாயாக உயர்ந்துள்ளது.