முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
அப்போது அரசு பேருந்துகள் பராமரிபு பணிகளை மேம்படுத்தவும், தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். மேலேயும் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக கட்டடங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்தும் அறிவித்துள்ளார் .