Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து சேவை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  கொரோனா இரண்டாம் அலை  பரவல் அதிகரித்ததால், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு  செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி  தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு நேற்று  காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து சென்னை, சேலம், தர்மபுரி, கோவை, விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூரு, திருப்பதி, மைசூர், ஹைதராபாத் மற்றும் விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு 1000 பேருந்துகள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் கர்நாடகா, ஆந்திராவுக்கு 173 அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசை மீண்டும் அனுமதி அளித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories

Tech |