தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்த உடனே தனியார் பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்று கூறியுள்ளனர்.
அதன்படி பெற்றோர்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அது பற்றி முதல்வர் இன்று ஆலோசனை செய்து, பள்ளிகள் திறப்பது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளை பொங்கல் முடிந்த உடனே திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதால் பயனில்லை. இம்மாத இறுதிக்குள் பள்ளிகளை திறக்க வில்லை என்றால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.