Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள்….. அமைச்சர் இன்று முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் செயலாளர் அதிகாரிகளுடன் பொங்கல் சிறப்பு பேருந்து முன்னேற்பாடுகள் குறித்து இன்று போக்குவரத்த துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை மேற்கொள்கிறார். வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கக்கூடிய நிலையில் சென்னையில் இருந்து பல்வேறு சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அதேபோன்று கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாகவும்  ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |