தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு குறையாமல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு கொண்டிருக்கிறது. அதன்படி தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,91,959 ஆகவும் 36 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,956 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு பிறகு முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலின் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி ஊரடங்கு குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.