Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ. 5000 வழங்கப்படுமா….? திமுக அமைச்சர் சொன்ன பதில் இதுதான்….!!!!

மதுரை விமான நிலையத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசாக  ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் திமுக போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். அரசு இன்றைக்கு இருக்கிற நிதி ஆதாரத்தை வைத்து தமிழக மக்களுக்கு கரும்பு கொடுக்கிறது. கரும்பு போராட்டத்திற்காக கொடுக்கப்படவில்லை. மக்களின் வேண்டுகோளுக்காக தான் முதல்வர் ஸ்டாலின் கொடுக்கிறார். அதன்பிறகு இலவச வேட்டி, சேலைகள் பல இடங்களுக்கு செல்லவில்லை என்று புகார்கள் எழுந்தாலும் கூறிய விரைவில் கொடுத்து விடுவோம் என்று அந்த துறையின் அமைச்சர் சொன்னது போன்று கூடிய விரைவில் கொடுக்கப்படும்.

அதன் பிறகு பொங்கல் பரிசு தொகுப்பை குப்பை வண்டிகளில் ஏற்றி சென்றது குறித்து அமைச்சரிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஏதோ ஒரு சில இடங்களில் அப்படி நடந்திருக்கலாம். அதெல்லாம் பிரச்சனை இல்லை. 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். அதோடு வேட்டி மற்றும் சேலையும் வழங்கப்படும். அந்தத் துறையின் அமைச்சர் சொன்னது போன்று எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும். மேலும் பொங்கல் பரிசுத் தொகையில் வழங்கப்படும் முறையான விலையை நிர்ணயித்து தமிழக முதல்வர் வழங்குகிறார் என்று கூறினார்

Categories

Tech |