தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போர் என 2.15 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் மற்றும் சமையலுக்கு பயன்படும் 20 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஒவ்வொரு பொருளும் எவ்வளவு எடையில் வழங்கப்படும் என்பது குறித்த முழு விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 1 கிலோ பச்சரிசி, வெல்லம், கோதுமை மாவு, ரவை, 50 கிராம் முந்திரி, திராட்சை, மிளகு, 10 கிராம் ஏலக்காய், அரை கிலோ பாசி பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு, 100 கிராம் நெய், மஞ்சள் தூள் , மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், 250 கிராம் கடலை பருப்பு, 200 கிராம் புளி ஆகியவற்றுடன் ஒரு துணி பையும் வழங்கப்பட உள்ளது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பரிசு தொகுப்பில் இடம் பெற்றுள்ள நெய் மட்டும், ஆவின் நிறுவனம் வாயிலாக கொள்முதல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.