தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இத்தோடு கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகுப்பில் முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம் உள்ளிட்ட 21 மளிகை பொருட்கள் இடம்பிடித்துள்ளது. இதனை அடுத்து வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி முதல் நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது . இந்நிலையில் தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூபாய் 1000 ரொக்க பணத்தையும் சேர்த்து வழங்க அரசு உயர் அதிகாரிகளுடன் நிதிநிலை தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.