Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.5000?…. கோரிக்கையை ஏற்குமா அரசு….????

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் திமுக அரசு பொங்கலுக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய அவர், அதிமுக ஆட்சியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பாரபட்சமில்லாமல் பொங்கல் பரிசு வழங்கினோம். ஆனால் திமுக ஆட்சியில் குறிப்பிட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது என்று குற்றம் சாட்டிய அவர் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Categories

Tech |