தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த வருடம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதனால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் பாடத்திட்டங்கள் 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் நடத்தவேண்டிய பாடப்பகுதிகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் வாரத்தில் 6 நாட்கள் வரை பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இதனால் நடப்பு ஆண்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனை மாணவர்கள்எ ளிதான வகையில் எதிர்கொள்ள கோவை மாவட்டம் பொதுத்தேர்வு போல திருப்புதல் தேர்வு நடத்த கால அட்டவணையை முதல் முதலாக வெளியிட்டுள்ளது. அதனால் மாணவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் பொது தேர்வை எதிர் கொள்வார்கள். அதன்படி முதலில் 9, 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை ஒரு பிரிவாகவும், டிசம்பர் 11 லிருந்து 16 வரை ஒரு பிரிவாகவும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை திருப்புதல் தேர்வு நடத்தப்படும். இந்த திருப்புதல் தேர்வுகள் அனைத்தும் 2 மணி முதல் 4 மணி வரை நடத்த வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.