Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறதா?…. பலே ஐடியா போட்ட பள்ளிக்கல்வித்துறை….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணங்கள் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்யப்பட்டனர். அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் இந்த ஆண்டும் பொதுத் தேர்தல் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஜனவரி மாதம் மற்றும் மார்ச் மாதத்தில் இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி 2 தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளே திருத்தாமல் பொதுத்தேர்வு போல பிற பள்ளிகளின் ஆசிரியர்கள் திருத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியது, பொதுத் தேர்வு நடத்தவேண்டும் என்பதில் பள்ளிக்கல்வித்துறை உறுதியாக உள்ளது. ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா பாதிப்பு எந்த அளவில் இருக்கும் என்று தெரியாது. எனவே கடந்த முறை தேர்வு எழுதாமல் தேர்ச்சி  செய்தது போல இந்தமுறையும் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு ரத்தாகிவிடக்கூடாது என்பதற்காகவே சிபிஎஸ்இ தேர்வு இரு கட்டங்களாக நடத்துகிறது. முதல் பருவத்தேர்வு நவம்பர்-டிசம்பர் மாதங்களிலும், 2வது பருவத்தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதனைப்போலவே தேர்வுகள் நடத்தப்படுகின்றது. இந்த முறையை தமிழக அரசு பயன்படுத்த வாய்ப்புள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றால் இரண்டு திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை கொண்டு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதற்காகவே திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் திருத்தக் கூடாது என்று அறிவித்துள்ளது. எனவே மாணவர்கள் திருப்புதல் தேர்வை பொதுத்தேர்வு போல் எண்ணி எழுத வேண்டும் என்று கூறுகின்றனர்.

Categories

Tech |