Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படாமல் அகமதிப்பீடு முறையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் உயர்கல்விக்கு சேர்க்கையானது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் நடைபெற்றது. ஆனால் நடப்பு ஆண்டில் அரசு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று திட்டமிடபட்டு இருந்தது.

அதற்காக மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்விற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. அந்த வகையில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன்னதாக வெளியிட்டுள்ளார். அதாவது தேர்வுகள் மே மாதம் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறைந்த அன்பில் தர்மலிங்கத்தின் 29-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி வி.என் நகரில் உள்ள தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அன்பில் தர்மலிங்கத்தின் படத்திற்கு அவரது பேரனும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் பொய்யாமொழி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையின்றி, மன மகிழ்வுடன் பயம் இன்றி படித்து தேர்வை எழுத வேண்டும். அவ்வாறு மனநிறைவுடன் தேர்வு எழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும். கொரோனா தொற்று காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த மாதத்தில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட பின் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |