Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு திருப்புதல் தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி மேயர், கவுன்சிலர்கள் மற்றும் துணை மேயர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவார்கள். மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் கொரோனா காரணமாக குறைக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத இறுதிக்குள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு திருப்புதல் தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். எந்தவித கவலையுமின்றி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மன மகிழ்வுடன் பயமின்றி படித்து தேர்வை எழுத வேண்டும். மனநிறைவுடன் தேர்வு எழுதி மாணவர்கள் தங்களுடைய இலக்கை அடைய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |