Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 10-ம் வகுப்புக்கு மே 6-ம் தேதியும், 11-ம் வகுப்புக்கு மே 10-ம் தேதியும், 12-ம் வகுப்புக்கு மே 5-ம் தேதியும் தேர்வுகள் ஆரம்பிக்கப்படும். இதில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்காக 4,000 மையங்களும், 12-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு 3,000 மையங்களும் அமைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும். இந்த பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவ-மாணவிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வில் 12,713 பள்ளிகளைச் சேர்ந்த 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

இதனையடுத்து 11-ம் வகுப்பு தேர்வில் 7,534 பள்ளிகளைச் சேர்ந்த 8.84 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். அதன்பிறகு 12-ம் வகுப்புக்கான தேர்வில் 7,506 பள்ளிகளைச் சேர்ந்த 8.37 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதைத்தொடர்ந்து 64,987 தனித்தேர்வர்களும், 413 சிறைக்கைதிகளும் பொதுத்தேர்வு எழுத இருக்கின்றனர். இந்த தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக 1,241 ஆசிரியர்கள் நிலையான கண்காணிப்பு படையிலும், 3,050 ஆசிரியர்கள் பறக்கும் படையிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு அறையின் கண்காணிப்பாளராக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கள் 118 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |