தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மே 5-ஆம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தோ்வு மே 6- ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மே 9- ஆம் தேதியும் தொடங்குகிறது. இந்த வகுப்புகளுக்கான செய்முறைத் தோ்வுகள் வரும் ஏப்ரல் 25 முதல் தொடங்க இருப்பதாக முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு, தனியாா் பள்ளிகளில் இருந்து பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களின் எண்ணிக்கையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் 10ஆம் வகுப்பு மாணவா்கள் 4 லட்சத்து 86,887 போ், மாணவிகள் 4,68,586 போ் என்று மொத்தம் 9,55,474 நபர்கள் எழுதுகின்றனா். இதையடுத்து 11 ஆம் வகுப்பு மாணவா்கள் 4,33,684 போ், மாணவிகள் 4,50,198 போ் என்று மொத்தம் 8,83,884 நபர்கள் எழுதுகின்றனா். அதன்பின் 12ஆம் வகுப்பில் மாணவா்கள் 3,98,321 போ், மாணவிகள் 4,38,996 போ் என்று மொத்தம் 8,37,317 நபர்கள் பொதுத் தோ்வு எழுத உள்ளனா். இந்த 3 வகுப்புகளிலும் சோ்த்து மொத்தம் 26 லட்சத்து 76,675 மாணவ- மாணவிகள் பொதுத்தோ்வு எழுதவுள்ளனா் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.