Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொதுத் தேர்வு மாணவர்களுக்கு… சற்றுமுன் வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் விபரங்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிகளுக்கு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் 31-ம் தேதிக்குப் பின் எந்த காரணத்திற்காகவும் கூடுதல் அவகாசம் வழங்கப்படமாட்டாது என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய வரும் 19ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் தேர்வு கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்வதில் சிலருக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து 31ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்கி அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 31ஆம் தேதிக்கு பின் எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் பள்ளிகளுக்கு அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது

Categories

Tech |