தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனால் நாளுக்கு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்துறை மற்றும்அரசு மருத்துவர்களின் உதவியோடு மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாகவும் வலியுறுத்தியுள்ளார்.