Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொது பெட்டிகளுக்கான முன்பதிவு ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களுக்கான ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. நோய் தடுப்பு நடவடிக்கையாக பாசஞ்சர் ரயில்கள் தற்போது வரை இயக்கப்படவில்லை. அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் பொதுப் பெட்டிகள் 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டன.

இதற்கிடையே பயணிகளின் தொடர் கோரிக்கையின் காரணமாக, தென்னக ரயில்வேயில் ஒரு மண்டலத்துக்குள் இயக்கப்படும் ரயில்கள் என்ற அடிப்படையில் பொதுப்பெட்டிகள் முன்பதிவு முறை ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற 17-ஆம் தேதி முதல், முதல் இரு மார்க்கங்களிலும் டி-7 மற்றும் டி-8 பெட்டிகள் பொது பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே இந்த ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொது பெட்டியுடன் கூடிய 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளில் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |