பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் காலியாக இருந்தது. அவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் 3 சுற்றுகள் மூலம் 58,307 இடங்கள் நிரப்பப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பிஇ, பி.டெக் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு 14-ஆம் தேதி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
அதன் பின்னர் இன்று பாட வகுப்புகள் தொடங்கியது. இந்நிலையில் முதல் பருவத்திற்கான கடைசி வேலை நாள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி ஆகும். மேலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.