தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து மக்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை செய்து வருகிறார். அதன்படி தேர்தல் வாக்குறுதலில் தெரிவித்த பெண்களுக்கு இலவச பயணம் குறித்த அறிவிப்பை தற்போது நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம் ஏழை பெண்கள் மிகவும் பயன் பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ‘பிங்க் பேருந்து’ வசதி தமிழகத்தைலேயே சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் மக்களின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்குவது குறித்து இரு தரப்பினர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலமாக ஓட்டுநர்களுக்கு ரூ.2012 முதல் ரூ.7981 வரை ஊதியம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பஞ்சப்படியை விரைந்து வழங்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் ஆட்சி போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு கடந்த 24ஆம் தேதியன்று ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதற்காக தமிழக முதல்வர் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பஞ்சபடி 2015 ஆம் ஆண்டிலிருந்து தரவில்லை என்றும் பஞ்சப்படி என்னும் DA வை விரைவில் வழங்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு வலியுறுத்தியுள்ளார்.