தமிழக சாலை போக்குவரத்து விதிகளில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு விதிமீறல்கள் மற்றும் குற்றங்களுக்கா ன அபராதம் தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமீறல் அபராதம் தொகையானது வரும் 28 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. என்னென்ன அபராதம் தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
*அனுமதி பெறாத டிராவல்ஸ் வாகனங்களுக்கு ரூ10,000
*சீட் பெல்ட் அணியாவிட்டால் ரூ1,000
*குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ10,000
*செல்போன் பேசிக்கொண்டு ஓட்டினால் ரூ10,000
*டூவீலரில் இருவருக்கு மேல் பயணித்தால் ரூ1,000
*பதிவு செய்யாத வாகனத்தை பயன்படுத்தினால் ரூ2,500
*சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டால் 75,000
*அதிவேகமாக வாகனம் ஓட்டினால் இருசக்கர வாகனத்திற்கு 1,000, இலகு ரக/ கனரக வாகனத்திற்கு 2,000