தமிழக மீனவ மக்கள் கட்சி சார்பாக முதல்வர் பழனிசாமிக்கு பரபரப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தமிழக மீனவ மக்கள் கட்சி சார்பாக முதல்வர் பழனிசாமி பரபரப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசின் இட ஒதுக்கீடு முறையில் எம் பி சி பிரிவு மக்கள் 20 சதவீத இட ஒதுக்கீட்டை பிரித்து வன்னியர்களுக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7% , மீதம் உள்ளவர்களுக்கு 2.5% மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்க மசோதா வெளியிடப்பட்டுள்ளது. இந்த உள்ஒதுக்கீடு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவிர மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். உள் ஒதுக்கீடு மசோதாவை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் மற்ற அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைந்து மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெறும் என கூறியுள்ளார்.