தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசு போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தமிழக அரசு கல்லூரி கல்வி இயக்ககம் இணைந்து மகளிர் காண ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இலவச பயிற்சி வகுப்புகளை வருடம் தோறும் நடத்தி வருகின்றது.
இந்த வருடத்திற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் ராணி மேரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி கல்லூரிகளின் இணையதளத்தில் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் www.queenmaryscollege.edu.in, www.smgacw.orgஆகிய இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவம்பர் 20ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.