Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மணல் குவாரிகள் திறப்பு…. சுற்றுசூழலுக்கு பாதிப்பு…. பாமக நிறுவனர் ராமதாஸ்….!!!

தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணலின் விலை அதிகரித்ததால் அந்த விலைக்கு இறக்குமதி மணல் வாங்க முடியாத நிலை ஏற்பட்டதால் மணல் இறக்குமதிக்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படும் காரணம் உண்மை அல்ல. 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து கொரோனா பரவல் தொடங்கும் வரை 5.20 லட்சம் டன் மணல் மலேசியாவில் இறக்குமதி செய்யப்பட்டது.அதில் ஒரு யூனிட் ரூ.10,000 விற்பனை செய்யப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக கட்டுமான பணிகள் முடங்கி இருப்பதால்தான் மணல் விற்பனை குறைந்து இருக்கிறது.

மேலும் தமிழகத்தில் குவாரிகளில் இருந்து ஆற்றுமணல் யூனிட்டுக்கு ரூ.12,000 வரை விற்கப்படும் நிலையில் இறக்குமதி மணல் விலை குறைவாக தான் உள்ளது. இதையடுத்து வெளிநாடுகளிலிருந்தும் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு கொண்டு சென்று விற்கப்படும் ஒரு சரக்குந்து மணலின் விலை ரூ.50,000 என்று இருந்த நேரத்திலும் அந்த மணலை பயன்படுத்துவதற்காக கேரள அரசு ஊக்குவித்தது தவிர மணல் குவாரிகளை அமைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் காவிரி, கொள்ளிடம்,பாலாறு, தென்பெண்ணை மற்றும் தாமிரபரணி போன்ற ஆறுகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 46 மணல் குவாரிகள் செயல்பட்டு தமிழகத்தில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. மணல் குவாரிகளுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட அரசியல் மற்றும் சட்டப்படியான நடவடிக்கை காரணமாக குவாரிகளை குறைக்கப்பட்டு தற்போது 7 ஆற்று மணல் குவாரிகள் மட்டும்தான் செயல்பட்டு வருகிறது

இதையடுத்து ஆற்று மணல் குவாரிகளால் அரசுக்கு பொருளாதார ரீதியாக எந்த பயனும் கிடைக்காது. அதன்படி 2003 ஆம் ஆண்டு இந்த அரசு மணல் விற்பனை ஏற்று நடத்த தொடங்கியதில் இருந்து தற்போது வரை மணல் விற்பனையில் அரசுக்கு சராசரியாக 80 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் இடைத்தரகர்கள் பல்லாயிரக்கணக்கான கோடி லாபம் பெறுகின்றனர்.

மேலும் ரூ.80 கோடி லாபத்திற்காக விலைமதிப்பற்ற சுற்றுச்சூழலை அழித்து விடக் கூடாது என்பதற்காக மணல் விற்பனையை ஊக்குவிப்பதன் மூலமாக அரசுக்கு அதிக வருவாய் மற்றும் கட்டுமான பணிகளுக்குத் தடை இல்லாமல் மணல் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று அரசு உணர வேண்டும். அதுமட்டுமில்லாமல் 15 புதிய மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு கைவிட்டு தமிழகத்தின் ஆறுகளில் 5 கி.மீக்கு தடுப்பு அணைகள் அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த வேண்டும். மேலும் இறக்குமதி மற்றும் எம்.சாண்ட் உற்பத்தியை அதிகரிக்க கட்டுமானத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல் மணல் கிடைத்தது அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்  குதெரிவித்துள்ளார்.

Categories

Tech |