தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பு குறைவான மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு ஜூன் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படுவது பற்றி முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்து நிரந்தரமாக மூட முன்வர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதால் பொதுமக்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்படுகிறது. மதுக்கடைகளுக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராடும் என கூறியுள்ளார்.