Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மனதை உலுக்கும் மரணம்…. 2 பக்க உருக்கமான கடிதம்….!!!!

திருச்சி திருவெறும்பூர் அருகே இளையராஜா என்பவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி மீள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். 32 வயதான இளையராஜா என்பவர் மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரின் பெற்றோர் மற்றும் சகோதரர் உள்ளிட்ட அனைவரும் ஏற்கனவே இறந்து விட்ட காரணத்தால் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்துள்ளார். அதனால் மதுவுக்கு அடிமையான இளையராஜா, தனது சித்தப்பா செந்தில் குமாரை வீடியோ கால் மூலமாக தொடர்பு கொண்டு, தான் விஷம் கலந்த மதுவை குடித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து செந்தில்குமார் உடனடியாக இளையராஜாவின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக வீட்டிற்கு விரைந்து செல்ல, அங்கு உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன் உள்ளே பார்த்தபோது விஷம் குடித்த நிலையில் இளையராஜா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அதன் பிறகு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து தற் கொலைக்கு முன்னதாக இளையராஜா எழுதியிருந்த இரண்டு பக்க கடிதத்தில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான நான். அதிலிருந்து மீள முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் மன்னித்து விடுங்கள். எனது சாவுக்கு முழு காரணம் எனது மது பழக்கம் தான். என்னைப் போல் யாரும் குடிகாரர் ஆகிவிடக் கூடாது. மது ஒருவன் வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றும் என்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் என்னால் மதுவை விட முடியவில்லை. மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால் என் பெற்றோருக்கு மீண்டும் மகனாகப் பிறப்பேன் என்று அந்த கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |