திமுக ஆட்சியில் தொன்மையான தமிழர் மரபுகள் மற்றும் மென்மையான தமிழிலக்கிய மரபுகளும் சிதைக்கப்படுகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் திமுக தொடர்ந்து தமிழர்களின் மரபுகள், மாண்புகள் மற்றும் மதிக்கத்தக்க புராதன நினைவுச் சின்னங்களை வேரோடு அழிப்பதே தான் வேலையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் தமிழ்ப்பாட நூலில், அவ்வையார் அகர வரிசைப்படி அருளிச்செய்த கொன்றைவேந்தன் பாடல்கள் அச்சிடப்பட்டுள்ளது. அதனைப் போலவே அனைத்து நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
தமிழ் பாட நூலில் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற பதிவுகளை நீக்குவதற்கு அதிகாரம் தந்தது யார்? ஊருடன் பகைக்கின் என்று எழுதுவதற்கு பதிலாக ஊக்கமுடைமை ஆக்கம் கொடுக்கும் கொன்றை வேந்தனில் இல்லாத சொந்த வரிகளை இணைக்க சொல்லியது யார்?தொன்மையான தமிழர் மரபுகள் மற்றும் மென்மையான தமிழ் இலக்கிய மரபுகளை சிதைப்பதற்கு யார் உங்களுக்கு உரிமை தந்தது? இதனை போல மரபுகளை அழிக்கும் முயற்சி பல்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.