Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் தமிழ் மொழியில்…. உள்துறை அமைச்சர் அமித்ஷா….!!!!

உலகில் தொன்மையான தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தொடங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழ் உலகின் தொன்மையான மொழி, உலகின் மூத்த மொழி, தமிழ் இலக்கியங்கள் மிகப் பழமையானவை. அதனால் தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இது பெருமை. தற்போது மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்கும் நடவடிக்கைகளை பல மாநிலங்கள் தொடங்கியுள்ளன.

அதனைப் போலவே தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை தமிழில் படிக்கும் போது மாணவர்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் தாய்மொழியின் வளர்ச்சிக்கும் இது உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |