Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடா…..? “அந்தப் பேச்சுக்கே இடமில்லை” போலியான தகவல்களை பரப்புவது ஏன்….? அமைச்சர் செம காட்டம்…..!!!!

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக போலியான தகவல் பரவுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே பேரண்டபள்ளி கிராமத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் கைத்தறி அமைச்சர் காந்தி ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினர். அதன்பின் மகப்பேறு உதவி திட்டம், பிறப்பு சான்றிதழ் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்றவைகளை 25 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினார்கள்.

இதனையடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, கடந்த வருடம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வரால் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது வரை 88,49,508 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எம்ஆர்பி மூலமாக 4308 மருத்துவ மற்றும் மருத்துவ களப்பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த காலி பணியிடங்கள் வருகிற அக்டோபர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் பரவுகிறது. இது போன்ற போலியான வதந்திகளை பரப்புவது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றார்.

Categories

Tech |