தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் ஜூன் 8 முதல் ஜூன் 11 வரை நடைபெற இருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை 2, தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணிகள் 2013 – 2018 பணிக்கான நேர்முகத் தேர்வு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான நேர்முகத் தேர்வின் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் 22 முதல் ஜூலை 30 வரை நடைபெற இருந்த துறைத்தேர்வுகள் அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வெளியிடப்படாத 14 துறைத் தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 20 அன்று வெளியிடப்படும். கொரோனா காரணமாக விண்ணப்பதாரர்களின் நலன் கருதி துறை தேர்வுகள் மே 2021 விண்ணப்பத்திற்கான கடைசி தேதி ஜூலை 31 என மாற்றம் செய்யப்படுகிறது என கூறியுள்ளது.