Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…. எந்தெந்த பகுதியில் தெரியுமா?…. இதோ லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மன்னார் வளைகுடா, உள்தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கன்னியாகுமரி ,திருநெல்வேலி , காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலான மழை பெய்யும்.

மேலும் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் வருகின்ற ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை அதிக வெப்பநிலை நிலவும். இதனை தொடர்ந்துகடந்த 24 மணி நேரத்தில் மழையின் அளவு கிண்ணக்கோரை 4 சென்டிமீட்டரும், சோலையாறு, தாளவாடி, கெட்டி 2, போடிநாயக்கனூர் 1, கொடநாடு 5 செண்டிமீட்டர் வரை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் அறிவிக்கவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |