Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்…. இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்…. கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகசென்னை உட்பட தமிழக முழுவதும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Categories

Tech |