தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வளம் வந்து கொண்டிருக்கின்றன. அதற்காக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, பேருந்துகளின் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி செல்லும் பிரச்சனை தொடர்ந்து இருந்து வருகிறது.கூடுதல் பேருந்துகளை இயக்கினால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். எனவே போக்குவரத்து துறை அமைச்சரிடம் மீண்டும் பேசி பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் .மேலும் தேர்வு நேரத்தில் பயம் வரக்கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.