தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது.
பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படாமல் பொதுத்தேர்வு கருதி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வரும் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் முன்கூட்டியே தகவல்கள் சேகரிக்க படுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் சார்பில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த அறிக்கையில், இலவச பஸ் பாஸ் பெற உள்ள மாணவர்களின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக நிர்வாகங்களுக்கு விரைந்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.