இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு பரவிய கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் வேலை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தினம் தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக தனியார் மினி பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது நடைபெற்று வரும் பேரவைக்கு பிறகு தனியார் மினி பேருந்து பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் தமிழகம் தனியார் மினி பேருந்து வழித் தடத்தை மேலும் நான்கு கிலோமீட்டர் நீடிக்க வேண்டுமென்று எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் அரசு பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட வழித்தடங்களை ஆராய்ந்து மீண்டும் பேருந்து போக்குவரத்தை தொடங்கப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.