[7:14 AM, 18/6/2022] Nanthini Nandi: தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு பாதிப்பு குறைந்ததை அடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனிடையே மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பொதுத் தேர்வு எழுதிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதாத மாணவர்களுக்கு உடனடி தேர்வுகளை நடத்த இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அடுத்த மாதம் நடைபெறும் உடனடி தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.இந்த அறிவிப்பு தேர்வு எழுதாத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.